நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் கிராமம் பரும்பு நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்து நிற்கும் கருவேலமரம், நீர் கருவை மரம், வனத்துறையால் வளர்க்கப்படும் மரங்களை உரிய அனுமதி இன்றி தனியார் கடைகளுக்கு விற்க கனரக வாகனங்களில் டன் கணக்கில் மரங்களை வெட்டி விறகுக்காக எடுத்து செல்லப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை தடுத்திட சம்பந்தப்பட்ட அரசு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குத்தப்பாஞ்சான் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.