ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் முகமது அலி , தனது மருமகனுடன் மலேசியா செல்ல , சாத்தான்குளத்தில் இருந்து இன்று 20.08.19காலை 7 மணி அளவில் காரில் மதுரை விமான நிலையம் சென்றனர். டிரைவர் செந்தில் காரை ஓட்டிச் சென்றார் . இருவரையும், மலேசியா அனுப்பி விட்டு மலேசியாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தசாத்தான்குளம்உஸ்மான், 55, இவரது மருமகன் கசாலி 40, இவரது மனைவி ஐனூல் 35, உதுமான் மகள் தஸீமா, 37, ஆகியோர் சாத்தான்குளம் திரும்பினர். பரமக்குடி சோமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திமுக பிரமுகர் மணி நகர் சங்கர் 54, இரு சக்கர வாகனத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் காரில் வந்த உஸ்மான், தஸீமா, ஐனூல், சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.கார் டிரைவர் செந்தில் குமார் தப்பி ஓடினார். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய கசாலி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் மீட்கப்பட்ட உடல்கள், பரமக்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.
பரமக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: 4 பேர் பலி
எழுதியவர்: mohan August 20, 2019, 6:33 pm




You must be logged in to post a comment.