17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நயகரா நதி கரையோரம் மணமணக்கும் தோசை வகைகள் “மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்”…

நயகரா நதி கரையோரம் மணமணக்கும் தோசை வகைகள் “மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்”…

எழுதியவர்: ஆசிரியர் August 20, 2019, 5:25 pm

இந்தியர்கள், அதுவும் பொதுவாக தமிழர்கள் சொந்த நாட்டை விட்டு எந்நாடு சென்றாலும் உணவு என்று வந்தால் தமிழ் பாரம்பரிய உணவை தேடி செல்லும் பழக்கம் உடையவர்கள்.  அந்த பழக்கம் 15,000 கி.மீ தொலைவு உள்ள நயகரா சென்றால் மாறி விடுமா என்ன??.. ஆமாம் அங்கும் தென் இந்திய தமிழ் உணவு ரசிகர்களுக்காக சுவையான பல் வகையான தோசை மற்றும் தென் இந்தியா உணவு வகைகளை சுவையாக வழங்கி வருகிறார்கள் “MADRAS EXPRESS – VEGETERIAN RESTAURANT”.

ஆம், உலகின் அதிசயமாகவும், பிரமாண்டமாகவும் கருதப்படும் நயகரா நதியை காண செல்லும் வழியில் நதியோரத்தின் அருகாமையில் அமைந்துள்ளது இந்த உணவகம். இங்கு சாதா தோசை, மசாலா தோசை, சீஸ் தோசை, மைசூர் மசாலா தோசை என பல்வேறு தோசைகளுடன், இட்லி, சமோசா போன்ற பல்வேறு உணவு வகைகளும் விற்கப்படுகின்றது.

இங்கு நயகராவில் சாலை உணவகம் என்ற முறையில் (STREET FOOD) பெரிய வாகனங்களில் வைத்தே இந்த வியாபாரங்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.  இப்பகுதியில் இது போன்று பல்வேறு இந்திய சுவை உணவகங்கள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இங்கு ஓரு தோசையின் குறைந்தபட்ச விலை $.10/-, அதாவது இந்திய மதிப்பின் விலை 710/-, ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும், பல்லாயிரம் மைல் தாண்டி தோசை சுவைக்க வேண்டுமானால், விலையும் கொடுத்துதானே ஆக வேண்டும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!