17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றியத்தில் விவசாயிகள் சங்கம் சார்பாக கண்மாய் தூர்வாரும் பணி துவக்கம்

நிலக்கோட்டை ஒன்றியத்தில் விவசாயிகள் சங்கம் சார்பாக கண்மாய் தூர்வாரும் பணி துவக்கம்

எழுதியவர்: mohan August 19, 2019, 8:34 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குல்லக்குண்டு கண்மாய் தூர்வாரும் பணி 65 லட்சம் மதிப்பில் விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாய சங்க தலைவர் ஜான் இன்னாசி தலைமையில் நேற்று தொடங்கியது.      இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்  யாகப்பன், நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீதிபதி,சங்கச் செயலாளர் மகாராஜன், பொருளாளர் தவமணி, ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, துணைத்தலைவர் ஆசைத்தம்பி, குழு உறுப்பினர்கள் பெரியசாமி ,முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.      இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:: கண்மாயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை, அதே சமயம்   மழை பெய்கின்ற காலத்தில் மழை நீரைத் தேக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேரனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.   இந்த மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் நிச்சயமாக மழைநீரை சேகரிக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என வாக்குறுதி அளித்தார்.. இதனைத் தொடர்ந்து பூமி பூஜை தொடங்கும் பணி நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!