17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – இரு சக்கர வாகனம் கைது

மதுரை – இரு சக்கர வாகனம் கைது

எழுதியவர்: mohan August 19, 2019, 8:17 pm

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பிரிவு அருகே பாண்டி(32) என்பவர் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பெருங்குடியை சேர்ந்த செல்லப்பாண்டி(22) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடி இருந்தது தெரியவந்தது. மேற்படி செல்லபாண்டியை சிறப்பு சார்பு ஆய்வாளர் .பழனிச்சாமி  கைது செய்தும்,வாகனத்தை பறிமுதல் செய்தும், செல்லப்பாண்டியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சக்கிமங்கலம் தனது வீடு அருகே செளந்தரபாண்டி(30) என்பவர் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என, சிலைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் சக்கிமங்கலத்தை சேர்ந்த முகமது பாருக்(27) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடி இருந்தது தெரியவந்தது. மேற்படி முகமது பாருக்கை SSI . கணேஷ் குமார்  கைது செய்தும்,வாகனத்தை பறிமுதல் செய்தும், முகமது பாருக்கை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!