17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக வலைதள வதந்தி.மதுரை மாவட்டத்திலிருந்து உசிலம்பட்டியை பிரிக்க கூடாது என வலியுறுத்தி சமூக ஆர்வர்களும், இளைஞர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக வலைதள வதந்தி.மதுரை மாவட்டத்திலிருந்து உசிலம்பட்டியை பிரிக்க கூடாது என வலியுறுத்தி சமூக ஆர்வர்களும், இளைஞர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan August 19, 2019, 7:47 pm

மதுரை மாவட்டத்தில் தற்போது உசிலம்பட்டி ஒரு சட்டமன்ற தொகுதியாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருமங்கலம் மாவட்டமாக உருவாக்கி அதில் உசிலம்பட்டியை சேர்ப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த தகவல் உண்மைதான் என பலரும் பேசிவரும் நிலையில் மதுரை மாவட்டத்திலிருந்து உசிலம்பட்டியை பிரிக்ககூடாது என வலியுறுத்தி உசிலம்பட்டி தேவர்சிலை முன்பாக சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உசிலம்பட்டியை பிரிக்க முன்வரக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிகழ்ச்சியில் அஜித்பாண்டி வழக்கறிஞர் ராமச்சந்திர பிரதீப் முக்குலத்தோர் புலிப்படை திரவியம் சுதர்சன் கோஸ்மின் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!