இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும்பணியை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, சமூக ஆர்வலர் ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. மேலும் மாணவர்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க உறுதி எடுத்தனர். மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேலியும் அமைத்து கொடுக்கப்பட்டது. மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இராஜசிங்கமங்கலம் பசுமையாக மாறுவதற்காக களப்பணியாற்றிய மாணவ குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.







You must be logged in to post a comment.