வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் சத்தியமங்கலம் மதுரா ராமாபுரம் அடுத்த ஸ்ரீ கன்னிகா புரம் கிராமத்தில் அருள்பாலிதுக் கொண்டிருக்கும் அருள்மிகு ஏரிக்கரை ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ கன்னியம்மாள். ஸ்ரீ தஞ்சம்மாள் வேங்கைக்கு 14 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை முதலே அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது .மேலும் மக்கள் பொங்கல் வைத்து தன் நேர்த்திகடனை செலுத்தினர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரேம்குமார் இமயவர்மன் ,பார்த்தசாரதி ,விநாயகமூர்த்தி ,கீதா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சி ஏற்பாட்டினை அருள்மிகு ஸ்ரீ ஏரிக்கரை கன்னி அம்மன் திருக்கோவில் நல அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் தனபால் செயலாளர் ஆனந்த், பொருளாளர் பழனி, துணை தலைவர் நடராஜன் , துணைத்தலைவர் ஆதிலட்சுமி சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து இருந்தனர். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
கன்னிகாபுரம் அம்மன் கோவில் திருவிழா
எழுதியவர்: mohan August 19, 2019, 11:46 am




You must be logged in to post a comment.