18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் தர்ஹா மத நல்லிணக்க சந்தனக் கூடு விழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் தர்ஹா மத நல்லிணக்க சந்தனக் கூடு விழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

எழுதியவர்: mohan August 19, 2019, 11:16 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டினம் தர்ஹா மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் துல் ஹாஜ் மாதத்தில் சந்தனக் கூடு மத நல்லிணக்க திருவிழாவாக நடத்தப்படுகிறது. இதன்படி, 118 ஆம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா 08.8.2019 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மார்க்க புகழ்மாலை (மவுலீது) ஒதப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான உரூஸ் என்னும் சந்தனக் கூடு 18.8.2019 இரவு தொடங்கியது இதையொட்டி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு நாட்டியக் குதிரைகள் நடனமாட , யானை அணிவகுக்க, வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட, மகளிர் குழுவின் தப்பாட்டத்துடன் புறப்பட்ட மத நல்லிணக்க சந்தனக் கூடு ஊர்வலம் காலை 5 மணியளவில் தர்கா வந்தது. அங்கு சந்தனக் கூடு , தர்ஹாவை மூன்று முறை வந்தது. நேர்த்திக்கடன் தென்னங்கன்றுகள், சந்தனம் சுமந்த தேர் உடன் பவனி வந்தது. முன்னதாக தர்கா வளாகத்தில் ஏராளமானோர் தொழுகை நடத்தினர். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தர்கா முன் வந்தடைந்த சந்தனக் கூடு இன்று (19.8.19) மாலை 5 மணியளவில் ஊர்வலமாக புறப்பட்டு ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசல் சென்றடைகிறது. விழா குழு தலைவர் ஹாஜா நஜிமுதீன், துணைத் தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல் ஹமீது, செய்யது இப்ராஹிம்ஷா, செயலர் களஞ்சியம், துணை செயலர்கள் ஹபிபுல்லா, கபிபுல்லா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜமாத் தலைவர் மீராசா, ஜெமீல் கான் மற்றும் செய்யதலி ஒலியுல்லா தர்ஹா நிர்வாகிகள், சுல்தானியா சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!