17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்ணமங்கலம் அருகே செண்பகத்தோப்பு அணை ஷட்டர் பழுதுபாா்க்க பொதுமக்கள் கோாிக்கை.

கண்ணமங்கலம் அருகே செண்பகத்தோப்பு அணை ஷட்டர் பழுதுபாா்க்க பொதுமக்கள் கோாிக்கை.

எழுதியவர்: mohan August 19, 2019, 10:17 am

கண்ணமங்கலம் அருகே படவேடு ஜவ்வாது மலை அடிவாரத்தில் கமண்டல நதி குறுக்கே செண்பகத்தோப்பு அணை உள்ளது. கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் தற்போது சுமார் 26 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. தொடர்ந்து இந்த மழை நீடித்தால், ஷட்டர் வரை சுமார் 45 அடி தண்ணீர் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த அணையில் விரைவில் ஷட்டர் பழுதுபார்த்து முழு கொள்ளளவு நிரம்ப பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!