நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் மாலத் தெருவின் பிரதான நுழைவாயில் ரோட்டில் காளியம்மன் கோவில் பின்புறம் சாக்கடை தொடர்ந்து தூர்வாரப்படாதலும் சுத்தம் செய்யப்படாத மண்ணால் மூடப்பட்டு சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாக மாறி இரவு நேரங்களில் மட்டும் அல்லாமல் பகலிலும் கொசுகள் கடித்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.. மேலும் இந்தப் பகுதியில் கொசு மருந்துகள் அடித்து பல வருடங்கள் ஆகிறது இனி வரும் மழை காலங்களில் இதை விட இன்னும் அதிகமான கழிவுநீர் தேங்கி சாலை முழுவதும் கழிவு நீர் தேங்கி தொற்றுநோய் பரவும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்கி துர்நாற்றம்.. தொற்றுநோய் பரவும் அபாயம் ….
எழுதியவர்: mohan August 18, 2019, 4:50 pm




You must be logged in to post a comment.