17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்புவிக்கும் போட்டி

உசிலம்பட்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்புவிக்கும் போட்டி

எழுதியவர்: mohan August 18, 2019, 4:41 pm

உசிலம்பட்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முரசொலி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மதுரை திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏராளமான பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பாடல்களை ஒப்புவித்தனர்.இதில் உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம், செயற்குழு உறுப்பினர் சோலைரவிக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா தகவல் தொழில்நுட்பஅணி பிரவீன்  மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!