இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் அதில் கவனம் செலுத்தாமல் முத்தலாக் மசோதா NIA, காஷ்மீரில் அமுலில் உள்ள சிறப்பு அந்தஸ்து சட்ட பிரிவு 370 நீக்கம்,போன்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டங்களில் மட்டுமே! முழுகவனம் செலுத்தி வருகிறது. ஆட்டோ மொபைல் தொழில் முற்றிலுமாக அழிந்து வருகிறது இதனால் நாட்டின் பொருளாதார வளர்சியில் வீழ்ச்சியும் மந்தநிலையும் ஏற்படுவதோடு நாட்டை ஆளும் பிஜேபி அரசு நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் நிலையே உள்ளது. மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசோ தமிழ்நாட்டின் நலனில் எவ்வித அக்கறையும் காட்டாமல் அவரவர் பதவியை தக்கவைப்பதில் குறியாக உள்ளார்கள். தமிகத்தில் கடும் வறட்சி நிலவிவரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் குடிதண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இதை கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் ஆளும் அரசு எவ்வித முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏரி குளங்கள் தூர்வாரப்படாததால் நீரை சேமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.இதில் மாநில குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி,என்.பாண்டி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பு
எழுதியவர்: mohan August 18, 2019, 4:34 pm




You must be logged in to post a comment.