18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிநீா் கேட்டு சாலை மறியல்

குடிநீா் கேட்டு சாலை மறியல்

எழுதியவர்: mohan August 18, 2019, 4:26 pm

ஆரணி அருகே உள்ள அன்மருதை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 1 மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர்  ஆரணி-வந்தவாசி செல்லும் சாலையில் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த பேரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!