18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் அகதிகள் முகாம் கண்காணிப்பு கேமரா திருட்டு

மண்டபம் அகதிகள் முகாம் கண்காணிப்பு கேமரா திருட்டு

எழுதியவர்: mohan August 18, 2019, 12:57 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வட்டாரக் கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, ரேஷன் கடை உள்ளன. முகாமில் உள்ள பழைய, புதிய குடியிருப்பு களில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முகாம் நுழைவு வாயில், உள் பகுதி தென் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தமிழக சிறப்பு காவல் படையினர் 8 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான நுழைவு வாயிலில் அகதிகள் மறுவாழ்வு துறை ஊழியர்கள் பகல், இரவு காவலர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகாமை விட்டு வெளியே வந்து திரும்பும் அகதிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக முகாம் நுழைவு வாயில் , தனி ஆட்சியர் அலுவலகத்தில் (மறுவாழ்வு) சில மாதங்களுக்கு முன் கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், நுழைவு வாயிலில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா ஆக., இரவு 11 மணி அளவிலும், அலுவலகத்தில் இருந்த மானிட்டர் கணினி ஆக.,13 காலை 9:30 திருடு போனது. இது தொடர்பாக அன்றைய தினம் பணியில் இருந்த இரவு காவலர், அலுவலக உதவியாளர் உள்பட 5 பேரிடம் துறை அலுவலர்கள் விசாரித்தனர். திருடு போன பொருட்கள் குறித்து தங்களுக்கு தெரியாது என தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தனி துணை ஆட்சியர் (மறுவாழ்வு) முருகேஸ்வரி , போலீசில் புகார் அளித்தார். இதன்படி மண்டபம் போலீஸ் எஸ்.ஐ., சிராஜூதீன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!