18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் மழை வேண்டி மாசாணி அம்மன் கோவில் ஊர்வலம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் மழை வேண்டி மாசாணி அம்மன் கோவில் ஊர்வலம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 18, 2019, 12:00 pm

உசிலம்பட்டியில் மழை வேண்டி மாசாணி அம்மன் கோவில் ஊர்வலம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் கிராமத்தில் மாசாணி அம்மன் கோவில் உள்ளது.குறிப்பிட்ட (நாடார்) சமுதாய மக்கள் மாசாணி அம்மன் கோவிலைக்கட்டி நிர்வகித்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆடி மாதக் கடைசியின் போது அப்பகுதி மக்கள் உள்ள ஊர்களில் மழை வேண்டி மாசாணி அம்மன் ஊர்வலம் நடைபெறும்.

.இதன்படி மதுரையிலிருந்து கிளம்பிய ஊர்வலம் உசிலம்பட்டி கீழப்புதூரை வந்தடைந்தது. பின்னர் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது.ஊர்வலத்தின் போது பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி சிலை ஊர்வலத்தில் பங்கேற்றனர்.இந்த சாமி ஊர்வலத்தின் போது மக்கள் தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொண்டால் அடுத்த அம்மன் ஊர்வலத்தின் போது அது நிறைவேறும் என்பது ஐதீகம்.மேலும் நீருக்காக யாரிடமும் கையேந்தக் கூடாது.தமிழ்;நாட்டில் மழை பெய்ய வேண்டும்.மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊர்வலம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகி ரங்கராஜ் தெரிவித்தார்.இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!