17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே செல்லும் வைகை ஆற்றுப்படுகையில்  11 மடையில் இருந்து தமிழக வனத் துறை அமைச்சரிடம் தண்ணீர்  திறக்க விவசாயிகள் கோரிக்கை

நிலக்கோட்டை அருகே செல்லும் வைகை ஆற்றுப்படுகையில்  11 மடையில் இருந்து தமிழக வனத் துறை அமைச்சரிடம் தண்ணீர்  திறக்க விவசாயிகள் கோரிக்கை

எழுதியவர்: mohan August 18, 2019, 11:03 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி , மட்டப்பாறை ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கண்மாய்களை தமிழக அரசின் தமிழக முதல்வர் சிறப்பு திட்டமான குடி மராமத்து பணி 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் திட்ட பணியை கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தொடங்கிவைத்தார்.

     இதனை நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல சி. சீனிவாசன நேரில் வந்து ஆய்வு செய்தார் . அப்போது அங்கிருந்த பிள்ளையார்நத்தம் கம்மாய் மற்றும் மட்டப்பாறை கம்மாய் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக ஒரு மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நிலக்கோட்டை ஒன்றியத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் பாரதரத்னா எம்ஜிஆர் காலத்தில் தொடங்கிய வைகை ஆற்றில் உள்ள 11 வது  மடையில் இருந்து மழை காலத்தில்  நேராகச் செல்லும உபரி் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை பெற்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இம்மனு மீதான உரிய பரிசீலனை செய்யப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், தேன்மொழி சேகர், நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன்,திண்டுக்கல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதய குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, சேகர், நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி செயற்பொறியாளர் நீதிபதி,முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!