18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொண்டியில் தமுமுக., ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தொண்டியில் தமுமுக., ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

எழுதியவர்: mohan August 18, 2019, 10:24 am

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக., சார்பில் 156 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, சமூக சேவகர்களுக்கு விருது, சமூக நல்லிணக்க விழா நடந்தது. தொண்டி நாச்சியா மகாலில் நடந்த முப்பெரும் விழாவிற்கு தொண்டி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். மெளலவி தாஹிர் சைபுதீன் கிரா அத் ஓதினார்.

வட்டார ஐக்கிய ஜமாத் துணை தலைவர் ஏ.ஆர்.ஏ.ஹசன் அலி பாஜில் ஜமாலி, இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள் எல்.ஆர்.சி. சின்னதம்பி, ராஜா, கிறிஸ்துவ மக்கள் மன்றம் எப்.கிறிஸ்துவ தாஸ் முன்னிலை வகித்தனர். தமுமுக – மமக., தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, மமக., பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது, துணை பொதுச் செயலாளர் கே.முஹமது கவுஸ், தமுமுக., மாநில செயலாளர் எம்.சாதிக் பாட்சா, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ஜே.கி துர், ஐமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் அல்ஹாஜ் எச்.முஹமது ஜலாலுதீன் அன்வாரி, தொண்டி புனித சிந்தாதிரை ஆலய பங்கு தந்தை சவரிமுத்து, தேசிய நல்லாசிரியர் திருவாடானை ப.உதயகுமார், தொண்டி கோபி ஆகியோர் பேசினர். தொண்டி தமுமுக – மமக., தலைவர் எஸ்.காதர் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!