17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வறண்ட கிணற்றில் தவறி விழுந்தவர் பலி.

வறண்ட கிணற்றில் தவறி விழுந்தவர் பலி.

எழுதியவர்: mohan August 18, 2019, 10:15 am

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரை சேர்ந்தவர் சண்முகம் மகன் ரவி  54. இவர் புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியாற்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விருப்பத்தின் பேரில் பணி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் எஸ்.புதூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர் தனது வீட்டின் பின்புறம் இருந்த வறண்ட நிலையில் இருந்த உரக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றின் உள்ளே தவறிவிழுந்தார். . உடனே பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த  தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு மிட்புபனியில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டு அருகிலுள்ள வா.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!