18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்

எழுதியவர்: mohan August 17, 2019, 9:33 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கீழக்கரை கிளைகள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்தையொட்டி, தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் ஒரு அங்கமாக, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை கிளைகள் மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவ இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

இம்முகாமை மாவட்ட செயலாளர் ஜே.எம். ஆரிப்கான் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர்கள் நசுருதீன், தினாஜ்கான், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 54 யூனிட் ரத்த தானம் வழங்கினர்.கீழக்கரை கிளை நிர்வாகிகள் சுல்தான், சித்கக், ஷபீக், முஷரப், அன்வர்தீன், சீனி, லாபிர்ஹுசைன்,அஸ்லம், கமர்தீன், ஹபீப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர். 14.8.19 அன்று புதுமடத்தில் (25யூனிட்) 15.8.19 அன்று இராமநாதபுரத்தில் (27 யூனிட்) நடைபெற்ற இரத்ததான முகாம்களில் 52 யூனிட் இரத்தம் தானம் வழங்கப்பட்டது. 19.8.19ல், தங்கச்சிமடம், 20.8.19ல் பரமக்குடியிலும் இரத்ததான முகாம நடைபெற உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!