17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனிதர்கள் மத நல்லிணக்கம் கடைபிடிக்க வேண்டும் கீழக்கரையில் நவாஸ் கனி எம்.பி., அறிவுரை

மனிதர்கள் மத நல்லிணக்கம் கடைபிடிக்க வேண்டும் கீழக்கரையில் நவாஸ் கனி எம்.பி., அறிவுரை

எழுதியவர்: mohan August 17, 2019, 9:24 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம், வடக்கு தெரு சமூக நல அமைப்பு ( நாசா), இஸ்லாமி கல்வி சங்கம், முஸ்லிம் பொது நல சங்கம், முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற கழகம் (மைபா), கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட கீழக்கரை சமூக நல அமைப்பில் சார்பில் பக்ரீத் பெருநாள் சந்திப்பு கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிதழ்ச்சி வள்ளல் சீதக்காதி சாலை ஹூசைனியா மகாலில் நடைபெற்றது. கீழக்கரை அனைத்து சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜமாத் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முகமது சாலிஹ் ஹூசைன் வரவேற்றார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி காயல்பட்டினம் இஸ்லாமிய அழைப்பாளர் ஜகரியா, கோவை இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷைக் சதக்கத்துல்லா உமரி , இஸ்லாமிய கல்வி சங்கத் தலைவர் முகமது தவ்ஹீத் ஜமாலி ஆகியோர் பேசினர். முகமது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அகமது ஹூசைன் ஆரிப் தொகுத்து வழங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பேசியதாவது: நல் நடத்தைகள் மூலம் ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்படுகின்றனர். ஜாதி, மதம் கடந்து நற்செயல்களால் அடையாளம் காணப்படும் மனிதன் தன்னை மேலும் பண்படுத்தி பிறருக்கு உதவுபவராக மிளிர வேண்டும். அவர் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை தொடர் பேணி வந்தால் சமூகத்தில் உயர்ந்த நிலை அடையாளம். சமூக நல்லிணக்க விழாக்களில் கலந்து கொண்டு இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டைகாப்போம்இவ்வாறுபேசினார்.செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும், சாயல்குடி அருகே குதிரை மொழி உவர் நீர் நன்னீராக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்த தமிழக அரசிடம் வலியுறுத்துவேன். கீழக்கரையில் மீன் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பரிந்துரைப்படும் என்றார். தமுமுக., முன்னாள் மாநில செயலாளர் சலீமுல்லா கான், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.மத நல்லிணக்கம், மனித நேயம் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு இஸ்லாமிய அழைப்பாளர்கள் காயல்பட்டினம் ஜகரியா, கோவை அஷ்ஷைக் சதக்கத்துல்லா உமரி விளக்கம் அளித்தனர். இஸ்லாம் மார்க்கம் தொடர்பாக சிறந்த கேள்விகள் எழுப்பிய ஆண்கள், பெண்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!