இராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை சார்பில்இருதயம், புற்று நோய், சர்க்கரை நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் கேணிக்கரையில் நடைபெற்றது இம்முகாமில் மருத்துவ பரிசோதனைகள், இருதய நோய்க்கான சிறப்பு சிகிச்சைகள், ஆஞ்சியோகிராம் பரிசோதனை, ஆஞ்சியோபிளாஸ்ட், ஸ்டெண்ட் சிகிச்சை, இருதய வால்வு சுருக்கத்திற்கு பலூன் சிகிச்சை, பேஸ்மேக்கர் கருவி பொருத்துதல், இருதயத் துவாரங்களை கருவி கொண்டு மூடுதல், புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சைகள், கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை கீமோதெரபி சிகிச்சை,(அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ்) சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்செந்தில் செல்வானந்த் தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலாளர் பிரபு,மாவட்ட மகளிர் அணி செயலாளர் கோகிலா,மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் மதிசூடன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் மணிகண்டன்,நகர் செயலாளர் கணேசமூர்த்தி, நகர் துணைச் செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மருத்துவ முகாம்
எழுதியவர்: mohan August 17, 2019, 9:17 pm




You must be logged in to post a comment.