18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் பாம்புகள் நடமாட்டம்…

பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் பாம்புகள் நடமாட்டம்…

எழுதியவர்: mohan August 17, 2019, 6:17 pm

பெரியகுளம் கோட்டாட்சியர்  பங்களாவில் அங்கு உள்ள பணிப்பெண் வீட்டுக்கு பின்புறமாக உள்ள தோட்டத்தில் கீரை பிடுங்குவதற்காக சென்ற பொழுது இரண்டு பாம்பு இருந்ததை கண்டு  சத்தம் போட்டுள்ளார் ..அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக. தீயணைப்புத்துறை குழுவினர் கோட்டாட்சியர் இல்லத்திற்கு விரைந்துவந்தனர் .. செடி கொடிகளுக்குள் ஒளிந்து இருந்த இரண்டு பாம்புகளில் ஒன்று அங்கிருந்து சீறிப்பாய்ந்து தம்ப முயன்றது . தப்ப முயன்றபாம்பு ஒன்றை லாவகமாக விரட்டி சென்று தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.. பின்பு இன்னொரு பாம்பை தேடிய பொழுது பொந்துக்குள் ஒளிந்திருந்த பாம்பு மின்னல் வேகத்தில் தப்ப முயன்றது .. தீயணைப்புத்துறை இளைஞர்கள் பாய்ந்து சென்று இந்த பாம்பை தனது கையால் பிடித்து தயாராக வைத்திருந்த பைக்குள் அடைத்து வைத்து வனத் துறை மூலமாக அருகிலுள்ள மலைப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார்கள்.. தன் உயிரையும் பொருட்படுத்தாது பாம்புகளை உயிருடன் பிடித்த பெரியகுளம் தீயணைப்பு துறையையும் அதில் பணியாற்றும் பணியாளர்களையும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

. சாதிக் பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!