18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாபெரும் இரத்ததான முகாம்…

மாபெரும் இரத்ததான முகாம்…

எழுதியவர்: mohan August 17, 2019, 5:48 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தின் கீழக்கரை கிளைகள் சார்பாக…17.8.2019 சனிக்கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.இந்திய நாட்டின் 73,வது சுதந்திர தினம் நாடு முவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர   பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை கிளைகள் மற்றும் இராமநாதபுரம் அரசுமருத்துவ இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைப்பெற்றது.

இம்முகாமை மாவட்ட செயலாளர் J.M ஆரிப்கான் துவக்கிவைத்தார். மாவட்ட துணைச்செயலாளர்கள் நசுருதீன்,தினாஜ்கான்,சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் 100 க்கும் அதிகமான ஆண்களும்,பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானம் செய்தார்கள்.நிகழ்ச்சி ஏற்பாட்டை கீழக்கரை கிளைநிர்வாகிகள் சுல்த்தான்,சித்தீக்,சபீக்,முஷரப்,அன்வர்தீன்,சீனி,லாபிர்ஹுசைன்,அஸ்லம்,கமர்தீன்,ஹபீப்அலி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!