18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 348 ஆவது ஆண்டு மகா ஆராதனை விழா

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 348 ஆவது ஆண்டு மகா ஆராதனை விழா

எழுதியவர்: mohan August 17, 2019, 5:27 pm

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 348 ஆவது ஆண்டு மகா ஆராதனை விழாவை ஒட்டி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மகா ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மகா ஆராதனை விழாவில் இரண்டாம் நாளான இன்று மகா அபிஷேக பூஜை பஜனை பாடல்கள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்று பின்னர் தீபாராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக மகா தீபாராதனை நிகழ்ச்சியின்போது வந்திருந்த பக்தர்கள் அனைவரும் 108 ராகவேந்திரர் போற்றி கூறி ராகவேந்திர சுவாமிகள் வழிபட்டனர்.இந்த மகா தீபாராதனை நிகழ்ச்சியை தலைவர் சக்திவேல், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் வெங்கடேசன், விவேகானந்தன், ராஜா, ரவிச்சந்திரன், ரகோத்தமன் மற்றும் உள்ள ஏனைய நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஆராதனை விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஆராதனை நிகழ்ச்சிக்கு சிரமமின்றி பக்தர்கள் வந்து செல்வதற்காக இலவச பேருந்து மற்றும் வேன் வசதிகளை ஆலய நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!