17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோணக்காத்து பாடலை பாடி அசத்திய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.!

கோணக்காத்து பாடலை பாடி அசத்திய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.!

எழுதியவர்: mohan August 17, 2019, 1:31 pm

பல்வேறு விஷயங்களை மறந்தும், மறைத்தும், மறுக்கப்பட்டும் வரும் இந்த காலத்தில் ஒரு அழகிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள, வெங்கம்பூர் சாமிநாதன் அவர்களால் எழுதப்பட்ட கோணக்காத்து பாடலை பாடியுள்ள மாணவர்கள் அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியை ஆகியோர் பாராட்டுக்குறியர்களே.! அந்த பாடலின் சாராம்சம் கீழ்க்கண்டவாறு உள்ளன.இயற்கை மிகவும் அழகானது,அமைதியானது, மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது ஆனால் அது சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்தி விடும்.!

தமிழ்நாடு அடிக்கடி இயற்கை சீற்றங்களால் தாக்கப்படும் பகுதியாகும். ஒரு முறை தமிழகம் புயலால் பாதிக்கப்பட்ட போது எழுதப்பட்ட நாட்டுப்புறப் பாடல் தான் இப்பாடல்.இந்த பாடலை பாடியுள்ள மாணவிகள் ஆர்த்தி, யுவஸ்ரீ, மகாலட்சுமி, பிரதிக்ஷா மற்றும் பறை அடித்த மாணவர் வீரப்பாண்டி இதற்கான பயிற்சி அளித்த ஆசிரியை ரா.ராஜி ஆகியோரை பள்ளியின் தாளாளர் சுதாகரன்,தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.

ஜெ.அஸ்கா்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!