17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி

எழுதியவர்: mohan August 17, 2019, 12:42 pm

மதுரை மாவட்டம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாம் சமூக அறக்கட்டளை சார்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் ஆ.மாயகிருஷ்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் கா.மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளின் ஓவியங்களை பார்வையிட்டு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர்  ஷீலா நன்றி தெரிவித்தார்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!