17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மழை வேண்டி செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

இராமநாதபுரத்தில் மழை வேண்டி செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

எழுதியவர்: mohan August 17, 2019, 11:57 am

உலக நன்மை, மழை வேண்டி இராமநாதபுரம் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 2 ஆயிரம் பெண்கள் தலையில் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலம் சென்றனர்..இராமநாதபுரம் சேதுபதி நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆகஸ்ட் இண்டாவது வாரம் உலக நன்மை கலச விளக்கு, வேள்வி பூஜை மற்றும் 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. செந்தமிழ் கல்லூரி செயலாளர் லட்சுமி குமரன் சேதுபதி, நகராட்சி முன்னாள் தலைவர் லலிதா கலா ரெத்தினம் துவங்கி வைத்தனர் . வழிபாட்டு மன்றத்தில் தொடங்கிய ஊர்வலம் ரோமன் சர்ச், காசுக்கடை பஜார், வண்டிக்காரத் தெரு, கேணிக்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வழிபாட்டு மன்றம் வந்தடைந்தது. இதில் சேதுபதி நகர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மன்றத் தலைவி கல்யாணி மாரிமுத்து, வேள்விகுழுத்தலைவி சாந்தி தனபால், வேள்விக்குழுவினர், மற்றும் மன்ற செவ்வாடை சக்திகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!