17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பைக்கில் இருந்து தூக்கிய எறியப்பட்ட மீனவர் வேன் மோதி பலி

இராமநாதபுரத்தில் பைக்கில் இருந்து தூக்கிய எறியப்பட்ட மீனவர் வேன் மோதி பலி

எழுதியவர்: mohan August 17, 2019, 11:35 am
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகர் செல்வம். இவரது மகன்கள் சுரேஷ்குமார் 37, குமார், 34. இருவரும் மீனவர்கள். சுரேஷ்குமாருக்கு 2 பெண் குழந்தைகள், குமாருக்கு தலா ஒரு பெண், ஆண் குழந்தை உள்ள்னர். இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் வந்த இருவரும்,  மாலை வீடு திரும்பினர். அரசு போக்குவரத்து கழக பணி மனை பகுதியை விரைவாக கடக்க முயன்றபோது சாலையில் குறுக்கிட்டவர் மீது இரு சக்கர வாகனம் மோதாமலிருக்க சுரேஷ்குமார் துரிதமாக பிரேக் அணைத்தார். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர். அப்போது அது வழியாகச் சென்ற வேன் சக்கரத்தில் சிக்கிய சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார் , மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து இராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!