17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » பள்ளியில் பிளாஸ்டிக் தவிர்க்க மாணவர்களுக்கு சில்வர் பாட்டில்..!

பள்ளியில் பிளாஸ்டிக் தவிர்க்க மாணவர்களுக்கு சில்வர் பாட்டில்..!

எழுதியவர்: mohan August 17, 2019, 11:16 am

முன்னீர்பள்ளம் ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், பிளாஸ்டிக் தவிர்க்க மாணவர்களுக்கு சில்வர் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை புறநகர் ஒன்றியம், முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கபில்சுப்ரமணியன் தலைமை வகித்தார். ‘நேதாஜி அன்பு கரங்கள் அறக்கட்டளை’ தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மனோகர், அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கபில்சுப்ரமணியன் தேசியக் கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.

இதையடுத்து, பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், மாணவ – மாணவியரிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 32 பேருக்கு உள்ளூர் பனியன் தயாரிப்பாளர் இசக்கிமுத்து மற்றும் ஆசிரியர் காந்திராஜா ஆகியோர் இணைந்து சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்கினர்.தொடர்ந்து, மாணவ – மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசியர்கள் காந்திராஜா, கோமதி, வீரலட்சுமி, சுதா ஆகியோர் செய்திருந்தனர். நிறைவில், ஆசிரியர் காந்திராஜா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!