18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2019, 9:21 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16/08/2019 மாலை 03.00 மணியளவில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் தலைமையில் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலத் துறை தலைவர் K.மெகருன்னிஷா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு விருந்தினர் C.சரவணன்,உதவிப் பேராசிரியர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை, அவர்கள் தான் தேர்ந்தெடுத்த பாடத்தில் திறனை வளர்க்குமாறும், தீய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நற்குணத்தை வளர்க்குமாறு மாணவிகளுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை ஆங்கிலத் துறையைச் சார்ந்த உதவிப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!