18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் தமிழக அரசால் டிஎன்டி சான்றிதழ் கிடைத்ததை கொண்டாடும் வகையில் கிடாவெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் தமிழக அரசால் டிஎன்டி சான்றிதழ் கிடைத்ததை கொண்டாடும் வகையில் கிடாவெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

எழுதியவர்: mohan August 16, 2019, 6:40 pm

டிஎன்டி சான்றிதழ் கேட்டு கடந்த சில வருடங்களாக போராடி பல போராட்டங்களுக்கு பின் தமிழக அரசால் டிஎன்டி சான்றிதழ் வழங்க தமிழக அரசு இதற்கென தனி அரசானை வெளியிட்டு டிஎன்டி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களில் டிஎன்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சான்றிதழ் நீண்ட நாட்களுக்கு பிறகு டிஎன்டி என கிடைத்துள்ளதால் இதனை கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பா பட்டி கிராமத்தில் இருக்கும் புகழ் பெற்ற ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் சீர்மரபினர் நல சங்கம் மற்றும் பொது மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அதனை தொடர்ந்து கிடா வெட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மேலும் சீர்மரபினர் நல சங்க மாநில செயற்குழு தலைவர் சோலைராஜா, சீர்மரபினர் நல சங்க மாநில பொருளாளர் தவமணி அம்மாள் , மாநில ஒருங்கிணைப்பாளர் ஒச் சாத்தேவன், ஆசை ராஜன், மூர்த்தி, முத்துராமலிங்கம், முருகன், காசிமாயன், ஜெயபாலன், மற்றும் சீர்மரபினர் நல சங்கத்தின் மாநில செயலாளர் ஆதிசேடன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!