18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » பயன்பாடில்லாத கீழக்கரை வட்டாச்சியா் அலுவலக கழிப்பறைக்கட்டிடம்.

பயன்பாடில்லாத கீழக்கரை வட்டாச்சியா் அலுவலக கழிப்பறைக்கட்டிடம்.

எழுதியவர்: mohan August 16, 2019, 6:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சாா்பில் கீழக்கரை வட்டாச்சியா் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2015-16 ம் ஆண்டில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.கழிப்பறை கட்டப்பட்ட ஆரம்பத்தில் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இதனை உபயோகப்படுத்தி வந்தனா்.நாளடைவில் இக்கழிப்பறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.சமூக விரோதிகள் தண்ணி அடிக்கும் இடமாகுமாக மாறியுள்ளது.அவா்கள் போதையில் கழிப்பறையிலுள்ள தண்ணீா் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.எனவே பொதுமக்கள் கீழக்கரை நகராட்சி கழிப்பறையை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோாிக்கை விடுத்துள்ளனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!