18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.!

நிலக்கோட்டை ஒன்றிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.!

எழுதியவர்: mohan August 16, 2019, 5:47 pm

நிலக்கோட்டை ஒன்றிய அளவில் 14 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான கபடி போட்டி நிலக்கோட்டை HNUPR பள்ளியில் நடைப்பெற்றது.இப்போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். இதனை அடுத்து சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் 73 வது சுதந்திர தின விழா பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,ஆசிரியை கு.நா.லட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார்,தலைமை ஆசிரியர் விஜயகுமார் சுதந்திர தின விழா சிறப்புரை ஆற்றினார், பிறகு மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற்றன.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,HNUPR பள்ளியில் ஒன்றிய அளவில் நடைபெற்றகபடி போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர் சுதர்ஸன் அவர்களுக்கும் பரிசுகள் வழங்கியது மட்டும் அல்லாமல். இப்பள்ளியின் தாளாளர் சுதாகரன், தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துக்கள் கூறினர்.ஆசிரியை ரா.ராஜி நன்றியுரை கூறினார் பிறகு நாட்டுப் பண்பாட விழா இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!