18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளம் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகமும் மோதி கோர விபத்து

ஆலங்குளம் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகமும் மோதி கோர விபத்து

எழுதியவர்: mohan August 16, 2019, 12:58 pm

தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆலங்குளம் அத்தியூத்து விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் கோயில் திருவிழாவிற்காக வந்த சேரன்மகாதேவியை சேர்ந்த செல்லப்பா மகன் முருகன் (45) கொத்தனார் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மாரியப்பன் (40) உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரும் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து ஆலங்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!