நாடு முழுவதும் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது.சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தேசியக் கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் விதமாக புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டார்.பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி.அருண்சக்திகுமார், வருவாய்அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட உயரதிகாரிகள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள்,பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.