திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 73- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டி அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர் பகுதிகளில் மற்றும் தாலுகா பகுதிகளில் சட்டவிரோதமாக அதிகாலை முதலே மதுபானம் விற்பனை செய்து வந்தனர். இதனையடுத்து 15.08.19அதிகாலை ஒட்டன்சத்திரம் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் மதுபானம் விற்பனை நடைபெறும் இடங்களில் சோதனை செய்தார். அப்போது நகர் பகுதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் மற்றும் சேகர் ஆகியோரை போலிசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 50 மதுபாட்டில்கள் மற்றும் தாலுகா பகுதிகளில் 100 மதுபாட்டில்கள் மொத்தம் 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது
எழுதியவர்: mohan August 16, 2019, 10:28 am




You must be logged in to post a comment.