18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் உலக சாதனை படைத்த இராமநாதபுரம் மாவட்ட அரசுப்பள்ளி

வில் மெடல்ஸ் உலக சாதனை படைத்த இராமநாதபுரம் மாவட்ட அரசுப்பள்ளி

எழுதியவர்: mohan August 16, 2019, 9:39 am

73 வது சுதந்திர தினமான  (15.8.2019) இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி.இப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 22 நிமிடங்கள் 40 நொடிகள் இந்திய நாட்டுப்பற்றை வலியுறுத்தி மாணவ மாணவியர் மிக நீண்ட உறுதிமொழி எடுத்து சாதனை படைத்தனர்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை தலைவர் ரமேஷ் கண்ணன் கலந்துகொண்டார்.வில் மெடல்ஸ் உலக சாதனை அமைப்பின் தலைவர் Dr.கலைவாணி முதன்மைச்செயலராளர் Dr.தஹ்மிதா பானு ஆகியோர் உலக சாதனை படைத்த சான்றிதழை அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கினர்.வில் மெடஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ரியாஸ்தீன், ஷேக் முகமது ரஷீது சிக்கல் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாந்த குமார் ஆகியோர் இந்நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!