இன்று (15/08/2019) காலை 09.00 மணியளவில் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர் திரு. பால கார்த்திகேயன், செயலாளர் மௌண்ட் லிட்ராரி பள்ளி, பரமக்குடி, தலைவர் மௌண்ட் லிட்ராரி பள்ளி,சிவகங்கை, தலைவர் ஸ்ரீ மீனாட்சி கல்வியியல் கல்லூரி சிவகங்கை, அவர்கள் கொடியேற்றினார். முகம்மது சதக் கல்லூரி தலைவர் அல்ஹஜ் S.M.யூசுப் அவர்கள் மற்றும் செயலாளர் S.M.சர்மிளா அவர்கள் நிகழ்வை வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து கொடி பாடல் பாடியும், அணிவகுப்பும் நடைப்பெற்றன.
சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்நிகழ்ச்சியானது வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி J.ஜரினா பர்வின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. மேலும் ஆங்கிலத் துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி S. பாத்திமா மரியம் வரவேற்புரை ஆற்றினார். முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் முன்னேற்றமே அவர்களின் வளர்ச்சி என்று கூறி சிறப்புரை ஆற்றினார்.
பின்பு ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி S.அல்நூர் ஷகாரின் மற்றும் மாணவிகள் குழு சுதந்திரத்தின் சிறப்பைப் பற்றி பேசிவும், பாடவும் செய்தனர். அதனைத் தொடர்ந்து வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி M.பாரிகா பர்வின் நன்றியுரை வழங்கினார். இறுதியாக தேசிய கீதத்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வை கூடுதல் கல்விச்சார் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் S.துர்கா, உதவிப் பேராசிரியை ஆங்கிலத்துறை, S.ரோசினா பர்வின் உதவிப் பேராசிரியர் தகவல் தொழில் நுட்பத்துறை,R. நதியா உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.






















You must be logged in to post a comment.