17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » சாயல்குடியில் தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளுக்கு வட்டாட்சியர் நிவாரண உதவி

சாயல்குடியில் தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளுக்கு வட்டாட்சியர் நிவாரண உதவி

எழுதியவர்: mohan August 15, 2019, 7:40 pm

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உறைக்கிணறு பகுதியில் நேற்று14.08.19 மாலை பலத்த காற்றின் காரணமாக மின்கசிவு ஏற்ப்பட்டதில் காசிலிங்கம் முருகேசன் குருசாமி ஆகிய மூன்று பனை தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.. இந்நிலையில் வட்டாட்சியர் முத்துக்குமார் பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பத்திற்கு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் வேட்டி சேலை போன்றவற்றை வழங்கினார் ..மேலும் வட்டாட்சியர் கூறுகையில் ; புதிய ரேசன் கார்டு ஆதார் அடையாள அட்டை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிவாரண உதவி தொகை கூடிய விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!