மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் அருகிலுள்ள சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் மரிசெல்வநாதன் வரவேற்றார். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் கா.மணிகண்டன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்..கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஆ மாயகிருஷ்ணன் அவர்களுக்கு சமூக சேவைக்கான முனைவர் பட்டம் பெற்றதற்கு பள்ளி சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டு ஏற்புரை நிகழ்த்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுடலைமுத்து, வரதராஜன்,ஜெயச்சந்திரன், மற்றும்யோகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.