மதுரை மாநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஸ்மார்ட் ஈ-சலான் POS (Point of Sale) இயந்திரம் மூலமாக இரசீது உடனுக்குடன் வழங்கப்படுகின்றது.மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ஈ-சலான் மூலமாக ரசீது வழங்கப்பட்டு அதற்கான அபராத தொகையை பொதுமக்கள் SBI BANK, POST OFFICE , இ- சேவை மையம், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம் மற்றும் mparivahan portal மூலமாக Payment Option –யை தேர்வு செய்து இணைய வங்கி கணக்கின் மூலமாகவும் செலுத்தலாம்..இந்த ‘ஸ்மார்ட்’ ஈ-சலானின் முக்கிய நன்மைகள் என்னவென்றால் போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுபவர்களை எளிதில் கண்டறியமுடியும்.
காவல்துறையினர் ஒரு வாகன பதிவு எண்ணைக்கொண்டு வாகனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதையும், அந்த வாகனம் திருட்டு வாகனமா என்பதையும் மற்றும் அந்த வாகனம் ஏதேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்பதையும் எளிதில் அடையாளம் காண முடியும். மேலும் இந்த இயந்திரத்தில் வாகன ஓட்டுனர் உரிமத்தில் உள்ள பதிவு எண்ணை பதிவு செய்தவுடன் ஓட்டுநர் உரிமம் உண்மையானதா அல்லது போலியானதா எனவும் எளிதில் கண்டறியமுடியும். “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம் மூலம் கொடுக்கப்படும் ரசீதில் உள்ள குற்றவிவரங்கள் அனைத்தும் இணையதளத்தின் மூலமாக உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அதற்கான அபராத தொகையை மூன்று மாதத்திற்குள் செலுத்த தவறினால் அவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம் மதுரை மாநகரில் போக்குவரத்து காவல்துறையினருக்கு 25 இயந்திரங்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கு 7 இயந்திரங்களும் மொத்தம் 32 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.