இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சுதந்திர தினவிழா நடந்தது. மூன்றாமாண்டு மனையியல் துறை மாணவி ஹெச்.மரியம் ஆபிரா வரவேற்றார். மூன்றாமாண்டு உளவியல் துறை மாணவி அ.ஜுஹி ஆமினா,சுதந்திர தினவிழா பற்றிய செய்தி கூறினார். முன்னாள் மாணவி ஜெனிபர் ராணி பேசினார். நேட்டிவ்லீட் பவுண்டேஷன் நிறுவனர் சிவராஜ ராமநாதன் தேசியக்கொடி ஏற்றினார்.
போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள்,தேர்வாணையர்,பல்துறை தலைவர்கள் , பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்றாமாண்டு கணிதவியல் துறை மாணவி ஆர்.தமிழ் வாணி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியைகள் கலா ,எம். இம்ரானா செய்தனர்.




You must be logged in to post a comment.