17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே கல்விச் சீர் வழங்கும் விழா.

மதுரை அருகே கல்விச் சீர் வழங்கும் விழா.

எழுதியவர்: mohan August 15, 2019, 5:27 pm

தனியார் பள்ளிகளுக்கு முன் உதாரணமாகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், கல்விக்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்றும் மதுரை அருகே புது தாமரை பட்டியில் உள்ள சிஎஸ்ஐ துவக்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கிராம மக்கள் இணைந்து பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து கல்விச் சீர் வழங்கும் விழா   நடைபெற்றது..மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே புது தாமரைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது சிஎஸ்ஐ துவக்கப்பள்ளி. 6400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பள்ளியானது 80 வருடத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது.இப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது .சுற்றுப்பகுதியில் உள்ள சிறிய கிராமங்களில் இருந்து ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர் .இது அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வி சீராக கிடைக்க வழிவகை செய்யவும்  தரமான கல்வியை அளித்து  மென்மேலும் உயர வழிவகை செய்யவும்  ஊக்குவிக்கும் வகையிலும் முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக மாணவிகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் இருக்கை வசதி கணினி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் அருள் விஜயகுமார் தலைமையில்  நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பிரியா ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதனை முன்னிட்டு புது தாமரைப்பட்டி கிராம மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்தும் மேளதாளங்களுடன் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர். தொடர்ந்து மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில் மாணவர்களுக்கு கல்வி பயில வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கியது சுற்றுவட்டாரப் பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!