சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசியகொடியேற்றும் நிகழச்சி, இரத்த தான நிகழ்ச்சி போன்ற மக்கள் நலன் சார்ந்தநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. தமிழ் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் popular front blood donor forum என்ற மொபைல் செயலியை (App)துவக்கி வைத்தார் இதன்மூலம் பொதுமக்கள் அனைவரும் இரத்தம் தேவையென்றால் எளிதாக பயனடைய முடியும்.இராமநாதபுரம் ராஜா தினகர் உயர்நிலைப்பள்ளியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்தம் தானம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் இரத்தம் தானம் செய்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியை சமூக மேம்பாட்டுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபைர் ஆபுதீன் தொகுத்து வழங்கினார். Ramnad Blood Bank இரத்தம் சேகரித்தனர்.கலைராஜன் சதிஸ்குமார், சாந்த திவாகர்,நந்தினி, பிரியதர்சினி பணியாற்றினர்.
இராமநாதபுரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இரத்த தானமுகாம்
எழுதியவர்: mohan August 15, 2019, 4:24 pm




You must be logged in to post a comment.