உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் ஏற்றிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்க செய்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமணையில் 73 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உசிலம்பட்டி சட்டம்ன்ற உறுப்பினர் நீதிபதி தேசியக்கொடியினை ஏற்றினார், ஆனால் தேசியக் கொடியினை ஏற்றும் போது அரைக் கம்பத்திலேயே ஏற்றியதுடன், அதில் குந்து கயிறு தேசிய கொடியை முழுவதும் சுற்றிக் கொண்டது, அதனை தொடர்ந்து தேசிய கொடி அரைக்கம்பத்தை தாண்டாமலேயே இருந்ததால் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தேசியக் கொடியை திணறி திணறி ஏற்றினார், இந்த சம்பவம் மருத்துவமணையில் இருந்த பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்தது, அதனை தொடர்ந்து மருத்துவமணையில் சிறப்பாக பணிபுரிந்தோர்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.







You must be logged in to post a comment.