17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றாலத்திற்கு குளிக்க சென்று காணாமல் போன மதுரை இளைஞர் மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

குற்றாலத்திற்கு குளிக்க சென்று காணாமல் போன மதுரை இளைஞர் மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

எழுதியவர்: mohan August 13, 2019, 5:28 pm

தென்காசி அருகே குற்றாலம் மெயினருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.கடந்த சில தினங்களாக அவ்வப்போது தண்ணீர் வரத்து அதிகரித்தவுடன் குளிக்கத்தடை விதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியின் முன்பு உள்ள தடாகத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூரிய நாராயணன் (20) என்பவர் கடந்த 10 ஆம் தேதி நண்பர்களுடன் குற்றாலம் அருவியில் குளித்து கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். அவர் குளித்து விட்டு கிளம்பிச் சென்று விட்டதாக நினைத்த நண்பர்கள் இரண்டு நாட்களாக எந்தவொரு தகவலும் இல்லாத நிலையில் 12.08.19 நேற்று குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த நிலையில் 13.08.19 இன்று அதிகாலை குற்றாலம் மெயினருவியின் முன் உள்ள நீர் தடாகத்தில் ஒரு உடல் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடன் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அது காணாமல் போன சூரிய நாராயணன் உடல் தான் என்பதை உறுதி செய்தனர்.மேலும் கைப்பற்றிய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!