தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பேச்சியம்மாள்(64) மகள் ஐஸ்வர்யா. இவருக்கு திருமணமாகி கொச்சியில் வசித்தார்.தற்பொழுது கர்பிணி என்பதால் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். காலையில் பேச்சியம்மாள் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் பரிசோதனைக்கு சென்றுள்ளனர். பரிசோதனை முடித்து விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த போது மாதங்கோவில சாலையின் நடுவே இருந்த தடுப்பில் ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பேச்சியம்மாள், ஐஸ்வர்யா இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஐஸ்வர்யா சிறு காயமடைந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த ஐஸ்வர்யாவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேச்சியம்மாள் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் தங்கமாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையின் தடுப்பில் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து பெண் பலி
எழுதியவர்: mohan August 13, 2019, 5:01 pm




You must be logged in to post a comment.