17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்து முன்னணி பிரமுகர் வீட்டை கல்வீசி தாக்கிய மர்ம நபர்கள்

இந்து முன்னணி பிரமுகர் வீட்டை கல்வீசி தாக்கிய மர்ம நபர்கள்

எழுதியவர்: mohan August 13, 2019, 4:56 pm

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகரில், வெள்ளிக்கிழமையன்று (ஆக.11) நூற்றுக்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையை நடத்தியுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் ரகசியமாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள், அங்கு போலீசார் வருவதை அறிந்து தப்பிச்சென்றுவிட்டனர். இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட சீனு என்கின்ற மெக்கானிக், 10 அடியாட்களுடன் இந்து முன்னணியைச் சேர்ந்த நகர பொதுச் செயலாளர் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த பெண்களிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளார்.பின்னர் விடியற்காலையில் அவர்கள் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்ற சீனு, காவல்துறையிடம் சேவல் சண்டை குறித்து தகவல் ஏன் கொடுத்தாய் என்று கூறி வெங்கடேசனை மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.நள்ளிரவில் வீட்டில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த வெங்கடேசன் அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து போலீசார் வழக்கபதிவு செய்து, குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.திருவண்ணாமலை பெருமாள் நகரில், அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடப்பதால் பெண்கள் தனியாக சென்றால் பெண்களின் ஆடைகளை பிடித்து இழுப்பது, பணத்தை பிடுங்குவது, சட்டைப் பையிலிருக்கும் பணத்தை கொள்ளையடிப்பது, சீட்டாட்டம் ஆடுவது, பெண்களை கேலி செய்வது என்று பல்வேறு சமூக விரோத செயல்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் கஞ்சா அடிப்பது, மரங்களில் உள்ள இளநீரை மரத்தின் உரிமையாளரை மிரட்டி பறித்து குடிப்பது, சாலையில் அமர்ந்து சாராயம், மதுபானம் அருந்துவது, இவர்களை தட்டிக் கேட்பவர்கள் மீது கொலை மிரட்டல் விடுப்பது, வீடு புகுந்து அடிப்பது ஆகிய சமூகவிரோத செயல்களை செய்வதையே இந்த சமூக விரோத கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளது.இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் துறையில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் இவர்கள் காவல்துறையில் புகார் செய்தால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று இறுமாப்புடன் கூறி பகிரங்கமாக பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.இவர்களைப் பற்றி காவல் துறையில் புகார் தெரிவிப்பதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் மீது தகுந்த நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் பெண்கள் மற்றும் அனைத்து பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மூர்த்தி, திருவண்ணாமலை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!