17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனநிலை பாதிக்கப்பட்ட வட இந்திய பெண் தந்தையுடன் ஒப்படைக்கப்பட்டார் .

மனநிலை பாதிக்கப்பட்ட வட இந்திய பெண் தந்தையுடன் ஒப்படைக்கப்பட்டார் .

எழுதியவர்: mohan August 13, 2019, 11:52 am

திருவாரூர் மாவட்ட காவல்துறை மன்னார்குடி தாலுகா காவல் சரகம், கர்ணாவூர் என்ற இடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி திரிந்த பேபி தேவி என்ற 20 வயதுடைய வட இந்திய பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து பராமரித்து வரப்பட்டார். திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .துரை உத்திரவின்பேரில் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அவரது பெற்றோரை கண்டறிந்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் அன்பழகன்  முன்னிலையில் மேற்படி பெண் அவரது தந்தையுடன் ஒப்படைக்கப்பட்டார்

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!